Sunday, 6 June 2010
Vikna Uncle
AFTERLIFE
When living for what's after life
We put the horse behind the cart.
We should bet on the here and now
And not what's after we depart.
What's after life I do not know.
Had I the facts, I'd tell of course.
If there is one who has been there
I want these answers from that source.
Where do we go? What do we do?
Do we look on those left behind?
Please let me see the evidence.
I do not want a faith that's blind.
There is none; thus until we're there
The afterlife remains a myth.
But still I've had some idle thoughts.
Here are two I've been toying with.
Suppose agents are partly right;
But afterlife just mirrors life.
So when we fly to Paradise
Our baggage is our current strife.
If 'after' is linked to 'before'
That fact another message sends.
By blowing our 'earth' all to hell
The life in 'heaven' also ends.
So just in case, it would be wise
On earth a heaven to create.
Then if there is an afterlife
We'll find it in a peaceful state.
மரணத்துக்கப்பால்…
மரணத்துக்கப்பால் என்னென்றெண்ணி வாழ்வது
ரதத்துக்குப்பின்னால் குதிரையைப் போடுவது போல
நம்மிலக்கு இங்கே இப்போதென்றிருக்க வேண்டும்
பயணத்துக்கப்பால் என்றிருத்தல் கூடா.
மரணத்துக்கப்பால் என்னென்று நானறியேன்
அறிந்திருந்தால் அந்த உண்மையை உரைத்திருப்பேன்
மரணத்துக்கப்பால் சென்றுவந்தவரிருந்தால்
அவரிடமிருந்து விடைகளை அறியவும் ஆசை.
நாம் எங்கே போகிறோம்? நாம் என்ன செய்கிறோம்?
நாம் விட்டுப் பிரிந்தவரை திரும்பிப் பார்ப்பதுண்டா?
தயைகூர்ந்து எனக்கிந்த தடயங்களைத் தாருங்கள்
ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கை எனக்கு வேண்டாம்.
அங்கெதுவுமில்லை இதுபோல நீயங்குள்ளவரை
மரணத்துக்கப்பால் புராணீகப் புணைக்கதைகளே
ஆனாலும் எனக்கும் விநோத எண்ணங்களுண்டு
பின்வருமிரண்டோடும் விளையாடிக்கொள்வேன்.
சிலவேளை இடைத்தரகர் உரையாடல் உண்மையெனில்
மரணத்துக்கப்பால் வெறும் விம்ப வாழ்வே
எனவே சொர்க்கத்துக்கு நாம்பறக்கும்போதும்
நாம் சுமக்கும் பொதிகள் நம் குழப்பங்களே.
அப்பாலென்பது முன்நாளின் தொடர்ச்சி என்றால்
அவ்வுண்மை இன்னோரு விளக்கம் சொல்லும்
நம்முலகை நாமூதி நரகத்துள் தள்ள தள்ள
நம்சொர்க்க வாழ்வுமோர் முடிவு கொள்ளும்.
ஒருவேளை இதுவொரு விவேகமாகும்
இவ்வுலகை மாற்றியோர் சொர்க்கம் செய்தல்;
அதனால் மரணத்துக்கப்பால் ஒரு வாழ்வுண்டேல்
அதைநாம் அமைதியானநிலை யாகக்காண்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
nice poem uncle.bavan
ReplyDelete